1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (08:33 IST)

கனமழை எதிரொலி: சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். நேற்று முதல் தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் விடிய விடிய கன மழை பெய்தது, தற்பொழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
 
அதேபோல் சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.