திமுகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் பிரச்சாரம்: வீடு வீடாக துண்டுபிரசுரங்கள் வழங்குவதால் பரபரப்பு!
திமுகவில் உள்ள பல தலைவர்கள் அவ்வப்போது இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதால் அவர்களுக்கு எதிராக இந்து அமைப்புகள் வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது மரியாதையுடன் நடந்து கொள்ளும் திமுக பிரமுகர்கள் இந்து கோவிலுக்கு சென்றால் மட்டும் விபூதியை அழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது
இந்த நிலையில் திமுகவின் இந்த செயல்களுக்கு இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வீடுவீடாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர். அந்த துண்டுப் பிரசுரங்களில் நானும் என் குடும்பத்தினரும் இந்து கடவுள்கள், சடங்கு சம்பிரதாயங்களை இழிவுபடுத்தும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம், இது என் தாய், குல தெய்வத்தின் மீது ஆணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது
இந்தத் துண்டுப்பிரசுரம் மிக வேகமாக பரவி வருவது மட்டுமின்றி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவி வருவதால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்