புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 22 ஜூன் 2020 (16:34 IST)

சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது - எம்பி., திருமாவளவன்

உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியான நிலையில் இந்த தீர்ப்பில் முதல் குற்றவாளியன கௌசல்யாவின் தந்தை சின்னசாமி என்பவர் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கௌசல்யாவின் தாய் விடுதலையை எதிர்த்து காவல்துறையினர் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இந்த வழக்கிலிருந்து கௌசல்யாவின் தாய் தந்தை ஆகிய இருவருமே விடுதலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் கூறியுள்ளதாவது :

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது;
ஆணவக் கொலைகள் ஊக்கப்படுத்துவதாகவும், கூலிக்கு கொலை செய்கிர கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தவும் இந்த தீர்ப்பு ஏதுவாக அமையும்; அதனால் ஆணவக் கொலைகளை தடுக்க உடனடியாக தனிச்சட்டங்களை இயற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.