புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 மார்ச் 2021 (11:05 IST)

ஒரு வருடம் கழித்து கிடைத்த தீர்ப்பு! தோண்டி எடுக்கப்படும் டாக்டர் உடல்!

கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த சைமன் உடலை கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் சைமன் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை கல்லறையில் அடக்கம் செய்ய அங்கிருந்தோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது உடல் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் மனைவி தொடுத்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நடந்து வந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் சைமன் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.