புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (15:31 IST)

18 வயதுக்குட்பட்டவர்கள் போராடக்கூடாது என சட்டம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

18 வயதுக்குட்பட்டவர்கள் போராடக்கூடாது என சட்டம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் போராட்டங்களில் கலந்துக்கொள்ளக்கூடாது என சட்ட விதிகள் உள்ளனவா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலத்தின் கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துக் கொண்டிருப்பதாகவும், தொடர் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 18 வயதுக் கீழ் உள்ளவர்கள் கலந்துக் கொள்ளக்கூடாது என சட்ட விதிகள் உள்ளதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், இவ்வழக்கை மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.