வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2023 (07:45 IST)

தொடரும் கனமழை: இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதை அடுத்து இன்றும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கன மழை காரணமாக நேற்று ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது வந்துள்ள தகவலின்படி திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். 
 
ஆனால் அதே நேரத்தில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்தாலும் இன்று காலை மழை பெய்யவில்லை என்பதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva