கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதல் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அந்தமான் பகுதியில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்னியாகுமரி தேனி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளத்தினால் பல இடங்கள் மூழ்கியுள்ள நிலையில் தற்போது மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது