புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (16:37 IST)

சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது 
 
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதோடு இடி மின்னலும் ஏற்பட்டுள்ளதால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையின் முக்கிய பகுதிகளான வளசரவாக்கம் தாம்பரம் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதாகவும் தேனாம்பேட்டை சைதாப்பேட்டை கிண்டி வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது