வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 நவம்பர் 2018 (11:56 IST)

சென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்?

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நாகப்பட்டினம் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் சென்னைக்கு எவ்வாறான தாக்கம் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. 
 
புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கடலோர பகுதிகளில் அதி கனமழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதோடு, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் சில பகுதிகளிலும் கன மழை பெய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர். 
 
தற்போது சென்னையில் இருந்து வடகிழக்கே, 740 கிமீ தொலைவில், புயல் வங்க கடலில் மையம் கொண்டுள்ளதாம். தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்க கூடும் என்பதால் சென்னைக்கு கனமழைக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. 
 
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு, புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். 
 
உள் மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.