புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:23 IST)

நாளை முதல் மீண்டும் கணமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் சென்னை மற்றும் பிற கடலோர பகுதிகளில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் வழக்கமாக இப்போது பெய்ய வேண்டிய மழையை விட 44 சதவிகிதம் குறைவான மழையெ பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி நாளை முதல் செனை மற்றும் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இம்மாத பிற்பகுதியில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.