திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 நவம்பர் 2023 (07:45 IST)

சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை: வானிலை எச்சரிக்கை..!

rain
சென்னை உள்பட அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில்  மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் விடாமல் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,  பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், ஈரோடு, கோவை , திருப்பூர் ஆகிய பகுதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகம் தீவிரமாக பணி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

Edited by Siva