செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 நவம்பர் 2021 (15:37 IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் திருமலைமூர்த்தி ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் இந்த சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது