வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (13:27 IST)

பள்ளியை பூட்டிய தலைமை ஆசிரியர்.. வெயிலில் உட்கார்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள்..!

தொடக்க கல்வி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பள்ளியை பூட்டிவிட்டு சென்றதால் மாணவர்கள் வெயிலில் உட்கார்ந்து பாடம் படித்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளன.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை மற்றும் தொடக்கநிலை ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பள்ளியை பூட்டிவிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளிக்கு வெளியே வெயிலில் அமர்ந்து படிக்கக்கூடிய நிலையில் உள்ளது.

ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே வந்த நிலையில் அவர்களையும் பணிக்கு வரக்கூடாது என்று தலைமை ஆசிரியர் மிரட்டியதாகவும் இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே வெயிலில் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு சில ஆசிரியர்கள் மட்டும் பாடம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளியை பூட்டி விட்டு சென்ற தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran