புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (14:27 IST)

டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்க கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் கொரொனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக காலை பிரதமர் மோடி, வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அசாம் மற்றும் மேகலயாவில் குறைவான நேரத்திற்கு மட்டும் மதுக்கடையில் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.
தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை டாஸ்மாக் கடைகள்  திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.