ஹெச் ராஜாவிடம் இருந்த கடைசி பதவியும் பறிப்பு! பாஜக தலைமை அறிவிப்பு!
பாஜக தேசிய செயலாளராக இருந்த ஹெச் ராஜாவிடம் இருந்த கேரள மாநில பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஹெச் ராஜா பாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்து வந்தார். ஆனால் அவர் கொடுக்கும் பேட்டிகள், அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் எல்லாம் சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு பாஜக மேல் எதிர்மறை உணர்வை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்தன. இதனால் தமிழகத்தில் தாமரை மலரவே மலராதோ என்ற எண்ணத்தில் பாஜக தலைமை அவரிடம் இருந்த தேசிய செயலாளர் பதவியை பறித்தது.
அதன் பிறகு அவருக்கு கேரள மாநில பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கி சி பி ராதாகிருஷ்ணனை நியமித்துள்ளது.