1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 நவம்பர் 2023 (13:29 IST)

கருக்கா வினோத் மீது குண்டாஸ்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் கவர்னர் மாளிகை முன்பு குண்டு வீசியதாக கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை  எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதாகவும் அதன் அடிப்படையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் அவருக்கு எளிதில் ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக அலுவலகம் மீது குண்டு வீசியதாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது என்பதும் இதனை அடுத்து தற்போது ஆளுநர் மாளிகை முன்பும் கொண்டு வீசியதை அடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran