ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (10:04 IST)

சென்னையில் மீண்டும் திடீர் பள்ளம்: அச்சத்தில் பொதுமக்கள்!

சென்னையில் மீண்டும் திடீர் பள்ளம்: அச்சத்தில் பொதுமக்கள்!

சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் சாலையில் திடீரென பள்ளம் உருவாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அரசு பேருந்து ஒன்று மற்றும் கார் ஒன்று சிக்கியது.


 
 
இதில் யாருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயணிகள் 25 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டன. இந்த பள்ளத்துக்கு காரணம் அருகில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகள் தான் என கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு மெட்ரோ நிர்வாகம் இழப்பீடு தருவதாகவும் கூறியிருந்தது.
 
பள்ளத்தில் சிக்கிய பேருந்து மற்றும் கார் பத்திரமாக மீட்கப்பட்டு பள்ளம் சரி செய்யப்பட்டு மீண்டும் அங்கு போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் திடீரென பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை அண்ணா சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டும் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுருத்தியுள்ளார்.
 
நேற்று முந்தினம் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே, புதிதாக உருவான பள்ளத்தில் வாகனம் எதுவும் சிக்கியதாக தகவல் இல்லை. ஜெமினி மேம்பாலம் நுழைவு வாயிலில் இந்த திடீர் சாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து அந்த பகுதியில் திடீரென பள்ளம், சாலை விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.