திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (08:58 IST)

தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை பாதிப்பு!

தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நாடு முழுவதும் பலர் கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மருந்துகள், படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றுகளும் ஒரு சிலருக்கு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியதுமத்திய பிரதேசத்தின் இந்தூர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 34 வயது நபருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 வயது நபருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.