ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2024 (17:14 IST)

இட ஒதுக்கீடு விவாகரத்தில் வன்னியர்களுக்கு பெரும் அநீதி.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்.!!

ramdoss
இட ஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர்களுக்கு தமிழக அரசு பெரும் அநீதியை இழைத்து வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மின் கட்டண உயர்வு மூலம்  மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வருவாய் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
 
வன்னியர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறிய தமிழக அரசு தற்போது கொடுக்க முடியாது என்று மறுத்து வருகிறது என்றும் இதன் மூலம் வன்னியர்களுக்கு தமிழக அரசு பெரும் அநீதியை இழைத்துள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்தார் 
 
தொடர்ந்து பேசிய அவர், திருவண்ணாமலை ரயில் பாதை திட்டம் உரிய நிலம் கையகப்படுத்தப்பட்டு உரிய நிதி ஒதுக்கி விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று கூறினார். 

மேலும் காவிரி நீரை நம்பி ஒன்றரை லட்சம் ஏக்கர் குருவை நெல் சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளதால் தமிழக அரசு விவசாயிகள் பயன் பெறும் வகையில் காவிரி நீரை திறந்து விட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 
அதிக வரி செலுத்துகின்ற தமிழகத்திற்கு குறைந்த அளவே மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதாகவும், குறைந்த அளவு வரி செலுத்துகின்ற சில மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.  மத்திய அரசு இதனை கைவிட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.