1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (10:49 IST)

அவசரமாக சென்னை திரும்புகிறார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ்: தமிழக அரசியலில் பரபரப்பு!

அவசரமாக சென்னை திரும்புகிறார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ்: தமிழக அரசியலில் பரபரப்பு!

அதிமுக இணைப்பு, அமைச்சரவை விரிவாக்கம் என அடுத்தடுத்து தமிழக அரசியலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இன்று மும்பையில் இருந்து சென்னை கிளம்புவதாக கூறப்படுகிறது.


 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அணிகளாக உடைந்த அதிமுக பல்வேறு திருப்பங்களுக்கு பின்னர் சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளது. இதனையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளார்.
 
முன்னாள் ஆளுநர் ரோசைய்யாவின் பதவிக்காலம் முடிந்த பின்னர் தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநரை மத்திய அரசு இன்னமும் நியமிக்கவில்லை. கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழக பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக உள்ள வித்தியாசாகர் ராவ் உள்ளார்.
 
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அதிமுக அணிகள் இணைய உள்ளதால் அமைச்சரவையில் மாற்றம் மற்றும் விரிவாக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக அணிகள் இணைந்ததும் ஓபிஎஸ் துணை முதல்வராக இன்றே பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தற்போது மும்பையில் உள்ளார்.
 
இந்நிலையில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு அவசரமாக இன்று சென்னை திரும்புகிறார். இன்று மதியம் அதிமுக அணிகள் இணைய உள்ளதால் நண்பகலில் ஆளுநர் சென்னை வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.