வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (08:10 IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!

Governor
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று 70-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்என் ரவி அவர்களும் தமிழக முதலமைச்சருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 70வது பிறந்த நாள் காணும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்தோடும் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் இளையராஜா உள்பட பல திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். 
 
முதலமைச்சரின் பிறந்த நாளான இன்று முதல்  காலை உணவு திட்டங்கள் திட்ட விரிவாக்கப்படுகிறது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் இன்று முதல் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றும் இதன் மூலம் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva