வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (20:41 IST)

மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசே ஏற்கும் - தமிழ்நாடு அரசு

அரசுப் பள்ளிகளில் படித்து ஐடிடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில்  சேரவுள்ள மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே,  மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் சேரவுள்ள மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் கொண்டு அவர்கள் வசிக்கும் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்ப படிவம் கொடுக்க வேண்டும் எனவும், அதன் பின் ஆட்சியர்கள்  தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திற்கு பரிந்துரை செய்வர் எனவும்,  மாணவர்களின் சான்றுகள், ஆவணங்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும்  அவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.