திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (08:47 IST)

மீண்டும் பாம்பன் பாலத்தில் விபத்து; மோதிக் கொண்ட அரசு பேருந்துகள்!

accident
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் மீண்டும் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தில் இன்று அதிகாலை பயணித்துள்ளது. அதேசமயம் திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்றும் பாம்பன் பாலத்தில் பயணித்துள்ளது.

அப்போது திடீரென இரண்டு பேருந்துகளும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டுள்ளன. இந்த விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுனர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம் பகுதியில் அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருவதால் பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த வாரம் இதேபோல அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து பாம்பன் பாலத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த தொடர் விபத்துகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K