பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்யாத அலட்சிய அதிகாரிகள்


Murugan| Last Modified வியாழன், 26 மே 2016 (20:51 IST)
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று, அதே கரூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போக்குவரத்து துறை அமைச்சராக்கியது அதிமுக அரசு. 

 

 
இந்நிலையில், இதற்கு முன்னர் கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் விஜயபாஸ்கருக்கு, எம்.எல்.ஏ வாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்பு அவருக்கு இந்த போக்குவரத்து துறையை இதே அ.தி.மு.க அரசு கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். 
 
எந்த ஒரு செயலும் செய்யும் முன்பு நன்கு யோசித்து செய்வது தான் படித்த அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளும், வாகனங்கள் ஆய்வு மேற்கொண்டு தமிழக அளவில் பள்ளிகள் திறக்கும் நிலையில்  கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளி வாகனங்கள் அதிகாரிகள் தரப்பில் ஆய்வு மேற்கொண்டதாக கூறுகின்றனர். 
 
அதற்கான அழைப்பை பத்திரிக்கையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என எவரையும் அழைக்காமல் அவர்களே மேற்கொண்டதாக அந்த போக்குவரத்து துறை அதிகாரிகளின் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அதை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளை உயர் அதிகாரிகளின் மிரட்டுதலுக்கு அடுத்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
மேலும் செய்தியாளர்களை அழைக்காமல் ஆய்வு நடத்தும் இந்த அதிகாரிகள், ஏதேனும் உள்குத்து வேலைகளில் ஈடுபட உள்ளனரவா? இல்லை தற்போது பொறுப்பேற்றுள்ள அதே கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயருக்கு களங்கம் விளைவிக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா என்பது புரியாத புதிராக உள்ளது. 
 
மேலும் இவர்கள் சார்பில் இதே அ.தி.மு.க ஆட்சியில் நடத்தப்பட சாலைவிழிப்புணர்வு வார விழா நிகழ்ச்சியில் அம்மா வாட்டர் இல்லாமல் அந்த ரூ 10 க்கு பதில் காஸ்ட்லி வாட்டர் ரூ 18 மதிப்பில் வாங்கி பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ஒரு சில நடுநிலையாளர்கள், ஏற்கனவே கடந்த ஆண்டு எடுத்த புகைப்படத்தை காட்டி செய்தி வெளியிட செய்யும் முயற்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் களம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிந்துள்ளன.

சி.ஆனந்தகுமார் - கரூர்


இதில் மேலும் படிக்கவும் :