செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:30 IST)

குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.21.09 லட்சம் மதிப்பு தங்கம்: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் 21.09 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கியது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
துபாய் இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் பலர் தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் அவர்களில் பலர் மாட்டுக்கொண்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மர்மமான பொட்டலம் ஒன்று இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பொட்டலத்தை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் 472 கிராம் தங்கம் இருந்ததாகவும் அவற்றின் மதிப்பு 21.09 லட்சம் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து தங்கத்தை கடத்தி வந்தவர்கள் குப்பைத்தொட்டியில் போட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது