திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (19:05 IST)

ஏடிஎம்-இல் தங்கம் எடுக்கும் வசதி: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது போல் இனி தங்கத்தையும் எடுக்க முடியும் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை கோல்ட் சிக்கா லிமிட்டெட் நிறுவனம்  சார்பாக வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த நிறுவனத்தின் ஏடிஎம்மில் தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்யலாம் என்றும் வங்கி ஏடிஎம் கார்டு கிரெடிட் கார்டு மூலமாகவே இந்த மெஷினில் தங்கத்தை வாங்கவும் முடியும் விற்கவும் முடியும் என்றும் அறிவித்துள்ளது 
 
இந்த நிறுவனமே பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு காடுகளை வழங்குவதாகவும் அந்த கார்டுகள் மூலம் தங்கத்தை வாங்கி விற்கவும் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியாவில் தங்கத்தை ஏடிஎம் முறையில் அறிமுகம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது