திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (17:07 IST)

பணம் கொடு.. இல்லைனா செத்துப்போ ! பைனான்சியர் மிரட்டல் ... வைரல் வீடியோ!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை  அருகில், ஒரு முதியவரை,பணத்தை வட்டிக்குக் கொடுத்தவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை  அருகில் உள்ள மூங்கிலேரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ் (58).  இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தள்ளபாடி கிராமத்தைச் சேர்ந்த, பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்துவரும் வேலாயுதம் என்பவரிடம் ரூ. 20 ஆயிரம் கடன் பெற்றதாகவும், அதில் ரூ, 10 ஆயிரம் தான் பணத்தைத் திருப்பிக்  கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்த நிலையில், இன்று காலையில், ஒரு டீக் கடையில் செல்வராஜை சந்தித்த பைனாசியர்...20 ஆயிரம் பணத்தைக்கேட்டு தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.