1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (08:01 IST)

கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன்: நடிகை காயத்ரி ரகுராம்

Gayathri
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பாஜகவிலிருந்து ஆறு மாதங்களுக்கு காயத்ரி ரகுராம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 
 
பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்றும் இந்த முடிவை எடுக்க அண்ணாமலை தான் காரணம் என்றும் அவரின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
அண்ணாமலை பற்றி இனி நான் கவலைப்பட மாட்டேன் என்றும் அண்ணாமலை ஒரு மலிவான தரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர் என்றும் அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்க தயாராக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பெண்களுக்கு சம உரிமை மற்றும் மரியாதை தராததால் தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகி உள்ளேன் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளது ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva