வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (13:41 IST)

அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யாவா? காயத்ரி ரகுராம் கேள்வி!

அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் உதயநிதி இல்லையா? சூர்யாவா? என பாஜக பிரபலம் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன்
 
மேலும் நடிகை காயத்ரி ரகுராம் மற்றொரு டுவிட்டில், ‘உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி. என்று குறிப்பிட்டுள்ளார்.