1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (09:47 IST)

கஞ்சா போதையில் சிறுவன் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு! – மதுரையில் அதிர்ச்சி!

மதுரையில் கஞ்சா போதையில் இருந்த நபர்கள் சிறுவன் உட்பட 5 நபர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி சங்கையா கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி வயது 50 இவரது பேரன் சர்வேஷ் (வயது 6) என்பவருக்கு  உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு செல்லும்போது இதே பெருங்குடியைச் சேர்ந்த மாரி சசிகுமார் ஆகிய இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது

போதையில் இருந்த மாரி,சசி இருவரும் கண்ணன் என்பவரை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரி, சசி  ஆபாசமாக பேசியதால்பெரியசாமி ஏன் இங்கு வந்து அபசமாக பேசுகிறாய் என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த மாரி, சசி  இருவரும் கத்தியால் தாக்கியதில் சிறுவன் சர்வேஷிற்க்கு  பலத்த வெட்டு விழுந்துள்ளது.

அதைத் தொடர்ந்து பெரிய சாமியையும் தாக்கி உள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த  கணபதி( வயது 26) விஜயகுமார் (வயது 27) அஜித் (வயது 28) ஆகிய ஐந்து பேரையும் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜாதி பெயரை கூறி தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த சங்கையா கோவில் தெரு மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்   தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து, கிழக்கு மாவட்ட செயலாளர் அரசமுத்து பாண்டியன், பாண்டியம்மாள் உள்ளிட்ட 80 பேர் அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த மதுரை தெற்கு வாசல் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன், திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் வசந்த், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் விமான நிலையம் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.