வீட்டில் ஆள் இருக்கும்போதே கொள்ளையர்கள் கைவரிசை – கோவையில் நடந்த திருட்டு!
கோவையில் வீட்டில் ஆள் இருக்கும்போதே இரவில் கொள்ளையர்கள் பீரோவை உடைத்து 40 சவரன் நகையைக் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
நாமக்கல் முல்லை நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர் கோழி மருந்துக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் முதல் மாடியில் உறங்கியுள்ளார். அப்போது வீட்டின் தரை தளத்தில் இருந்த பீரோவை உடைத்த கொள்ளையர்கள் 40 சவரன் நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று காலை எழுந்து கீழே வந்து பார்த்த போது பீரோ உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியான ராதாகிருஷ்ணன் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் தடவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.