திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (10:34 IST)

கல்யாணப் பத்திரிக்கைக் கொடுப்பது போல வந்த கும்பல் – கட்டிப்போட்டு 30 சவரன் கொள்ளை!

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகைகளைக் கொள்ளை அடித்த கும்பல் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை கணேஷ்நகரில் ராம்குமார் என்பவர் தனது மனைவி ஜெபகிருபா  மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ராம்குமார் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து வீட்டுக்கு வந்த கும்பல் ஒன்று கல்யாணப் பத்திரிக்கை வைக்க வந்திருப்பது போல நடித்துள்ளனர். அதனால் அவர்களை உள்ளே அழைத்த ராம்குமாரின் மனைவியை கத்திமுனையில் வாயில் டேப்பை ஒட்டி கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் அவரின் குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோவ் சாவியை வாங்கி அங்கிருந்த 30 பவுன் நகையையும் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையையும் திருடிச் சென்றுள்ளனர்.

ராம்குமார் வீட்டில் இருந்து இந்த கும்பல் வேகமாக ஓடுவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது ஜெயகிருபா கட்டப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரின் கட்டை அவிழ்த்து நடந்ததை தெரிந்துகொண்டுள்ளனர். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் இந்த திருட்டு சம்மந்தமாக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.