திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (17:43 IST)

நாங்கள் இப்போது முழு நேர காங்கிரஸ் : கரூரில் கோஷ்டி மோதல் (வீடியோ)

காங்கிரஸ் கட்சியின் கரூர்  மாவட்ட அலுவலகம், கரூர் வையாபுரி நகர் இரண்டாவது கிராஸ் ரோட்டில் அமைந்துள்ளது.


இந்நிலையில், மாவட்டத்தலைவராக ஏற்கனவே பேங்க்.சுப்பிரமணியன் இருந்த நிலையில் அவருக்கு பதில் சின்னசாமி என்பவரை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பரிந்துரையின் பேரில் அக்கட்சி அறிவித்திருந்தது. 
 
கட்சியில் உட்கட்சி மோதல் மிகவும் பெரிதான நிலையில், தற்போது., கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகம்  சரியான செயல்பாடு இல்லை என்றும், பகுதி நேர கட்சி நடத்துபவர்கள் போல செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியதோடு, அக்கட்சியினர் சிலர் காங்கிரஸ்  மாவட்ட  பொதுச்  செயலாளர்  சுரேகா  பாலசந்தர்  தலைமையில்  மாவட்ட  அலுவலகத்தில்  பெட்டி  படுக்கையுடன்  குடியேறி போராட்டத்தில்  ஈடுபட்டனர். 
 
இதனால்  பரபரப்பு  ஏற்பட்டது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி என்றாலே, உட்கட்சி மோதல் அதிகமாக நிலவும் நிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தற்போது மேலும், மேலும் உட்கட்சி மோதல் நிலவுகின்றது
 
பேட்டி : சுரேகா பாலச்சந்தர் – கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் – காங்கிரஸ் கமிட்டி
-சி.ஆனந்தகுமார்