கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி ஒதுக்கீடு
கொரொனாவால் உயிரிழந்த மருத்துவர்கள். செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உள்ளிட்ட 34 பேரின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதற்காகத் தமிழக அரசின் மக்கள் நலவாழ்வுத்துறை நிதி ஒதுக்கியுள்ளது.
கடந்தாண்டு இந்தியாவில் கொரொனா தொற்று தொடங்கியது. தற்போது இரண்டாவது அலை பரவிவருகிறது. விரைவில் 3 வது தொற்று அபாய விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரொனா தடுப்பு முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இவர்களில் கொரொனாவால் மருத்துவர்கள். செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உள்ளிட்ட 34 பேரின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதற்காகத் தமிழக அரசின் மக்கள் நலவாழ்வுத்துறை நிதி ஒதுக்கியுள்ளது.
34 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் 8.50 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.