வரும் சனி, ஞாயிறு 2 நாட்களும் முழு ஊரடங்கா?
தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
மே இரண்டாம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை காரணமாக மே 1ஆம் தேதியும் ஊரடங்கு அமல்படுத்த சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளின் போது எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் கட்டுப்பாடுகளை தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு செய்ய வேண்டும் என்றும் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மே 1ஆம் தேதியும் தொழிலாளர் தினம் பொது விடுமுறை என்பதால் அன்றைய தினம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இது குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது இதனால் வரும் சனி ஞாயிறு முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது