1 வருடத்திற்கு சென்னை மெரீனா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பு..!
நாளை முதல் சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் ஒரு வருடத்திற்கு வாகனங்கள் அனுமதி இல்லை என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னை மெரினா அருகே கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் ஒரு வருடத்திற்கு சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் மட்டும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
லைட் ஹவுஸ் முதல் காந்தி சிலை வரையிலான சர்வீஸ் சாலையில் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அதன் பிறகு சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனுமதிக்க படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva