திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (14:53 IST)

தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம்.. போதுமான பயணிகள் இல்லை என அறிவிப்பு..!

south railway
போதுமான பயணிகள் வரவில்லை என்பதால் தமிழகத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தை மூடப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள கரூர் சேலம் வழித்தடத்தில் வாங்கல் என்ற ரயில் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.  இந்த ரயில் நிலையம் இன்று முதல் அதாவது ஜனவரி 25ஆம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ரயில் நிலையத்தில் போதிய பயணிகள் இல்லை என்றும் அதன் காரணமாக இந்த ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் இந்த ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் நிற்காது என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதுமட்டுமின்றி பயணிகளுக்கு இந்த ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கப்படாது என்றும்  ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran