1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (07:39 IST)

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்போது?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் இன்று முதல் மாணவர்கள் டவுன்லோட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது என்று தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் நடைபெற இருக்கும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏப்ரல் ஆறு முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற இருப்பதாகவும் இதற்கான கேள்வித்தாள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva