1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (07:54 IST)

சென்னைக்குள் பயணம் செய்யவும் இ-பதிவு கட்டாயம்: இன்று முதல் அமல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் ஊரடங்கு உத்தரவுக்கு பின் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்யவும் மாவட்டங்களுக்குள் பயணம் செய்யவும் இ-பதிவு அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒரு இணையதள முகவரியையும் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த இணையதள முகவரியில் பதிவு செய்துவிட்டு முக்கிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டத்திற்கு வெளியேயும், மாவட்டத்திற்கு உள்ளேயேயும் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இன்று முதல் சென்னையில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் சென்னை மாநகர எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டும் என்றால் இ-பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு இன்றி வாகனங்களில் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.