புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (07:10 IST)

இன்று முதல் திமுகவில் நேர்காணல்: சுறுசுறுப்பாகும் அண்ணா அறிவாலயம்!

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு இன்று முதல் நேர்காணல் நடைபெற இருப்பதை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது

 
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அதிமுக திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்பமனுவை கடந்த சில நாட்களாக பெற்று வந்தன. இந்த நிலையில் நேற்றுடன் விருப்பமனுவை பெறும் காலம் திமுகவைப் பொறுத்தவரை முடிவடைந்துவிட்டது
 
இதனை அடுத்து இன்று முதல் நேர்காணல் தொடங்குகிறது, திமுக தலைவர் முக ஸ்டாலின் துரைமுருகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் வேட்பாளர் விருப்ப மனு கொடுத்து அவர்களிடம் நேர்காணல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் ஒரு சில நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும் அதன்பிறகு வேட்பாளர்பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்று முதல் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அடுத்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுவதால் சென்னை அண்ணா அறிவாலயம் சுறுசுறுப்பு அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது