திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (23:43 IST)

வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, இலவச மருத்துவ முகாம்

கரூரில் முன்னாள் பிரதமர், வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
 
கரூர் மாவட்ட பா.ஜ.,மருத்துவ பிரிவு சார்பில், கரூர் அடுத்த,  தளவாபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் அர்விந்த் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில நிர்வாகி டாக்டர் விஜய பாண்டியன்  கலந்து கொண்டனர் ஆறு மருத்துவமனைகளின், பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்றனர். முகாமில், 100 க்கும்  மேற்ப்படோர் கலந்து கொண்டனர். இதில் இலவசமாக கண் பரிசோதனை, சர்க்கரை நோய், உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை மேற்க்கொண்டு சிகிச்சை அளித்து மருத்துகளை வழஙகினர்.