1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (23:21 IST)

நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள்....

அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 30ஆவது நினைவு தினம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
 
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 30ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான பேங்க்.சுப்பிரமணியன், தலைமையில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சுப்பன், வட்டார தலைவர் மனோகர், துணைத்தலைவர் சின்னையன், பொருளாளர் தான்தோனி குமார், பரமசிவம், செல்வராஜ், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை மேலாளர் பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார்