திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2023 (08:15 IST)

மின் கணக்கீடு எடுக்காதவர்களுக்கு என்ன கட்டணம்? 4 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

சமீபத்தில் அடித்த புயல் காரணமாக டிசம்பர் மாதம் ஒரு சில பகுதிகளில் மின் கணக்கீடு எடுக்கப்படாத நிலையில் அது குறித்த விளக்கத்தை மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் வெள்ளம் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் கணக்கீடு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மின் கணக்கீடு எடுக்கப்படாத நான்கு மாவட்டங்களில் அக்டோபர் மாதம் மின் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்று மின்சார துறை தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாதவர்களுக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மேலும் மலை பல்வேறு வீடுகளில் தண்ணீர் தேங்கி மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார துறை விளக்கம் அளித்துள்ளது.

Edited by Siva