முதல்வர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புகழ்ந்துள்ளார்.
தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து கொரொனா காலத்தில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இ ந் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார். அதில், கடந்த ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி கொரொனாவை கட்டுப்படுத்தினாரோ அதேபோல் முதல்வர் ஸ்டாலின் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் . முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பான பணியாற்றி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்