திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (13:42 IST)

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது

ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில் கடந்த சில வாரங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கர்நாடக மாநிலத்தில் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கின் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி கைது செய்ய போலீசார் முயற்சித்த போது அவர் தலைமறைவானார் 
 
கடந்த சில நாட்களாக தனிப்படைகள் அவரை தேடிவந்த நிலையில் சற்று முன் அவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி இன்று அல்லது நாளை சென்னை அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது