எம்.ஜி.ஆர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்த முன்னாள் அமைச்சர்
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அஇஅதிமுக கட்சியை தொடங்கினார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தக் கட்சியை அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதா பொதுச்செயலாளராக தேர்தலை சந்தித்து, முதல்வராக தொண்டர்களை வழி நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின், தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை காளியங்கராயன் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மீது மர்ம நபர்கள் பெயிண்ட் ஊற்றியுள்ளனர்.
இதுபற்றி அறிந்த அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்து வருவதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்த நிலையில் சிலைக்கு பெயிண்ட் பூசிய லியோ நார்ட் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலை மீது மர்ம நபர்கள் பூசிய பெயிண்டை துடைத்து பால் -வினர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை
செய்தனர்.