வியாழன், 17 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (10:13 IST)

ஒரு கோடி பனை விதைகளை நடும் நிகழ்ச்சி - வனத்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.

தமிழக அரசு தமிழக முழுவதும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்காகவும் பசுமை தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒரு கோடி பனை விதைகளை நீர்நிலைகளில் நட வேண்டும் என்ற திட்டத்தினை அமுல்படுத்தி அதனை இன்று வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் கரையோரமாக எல்லிஸ் சத்திரம் அணை அருகில் பனை விதைகளை நட்டு துவக்கி வைத்தார்.
 
கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பனை விதைகளை நட்டனர் மாவட்ட ஆட்சியர் சி பழனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி......
 
தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகளை நட வேண்டும்  என்று இலக்கு நிர்ணயத்து வனத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சம் பனை விதைகளை 13 ஒன்றிய பகுதிகளிலும் உள்ள நீர் நிலைகளான குளங்கள் ஏரிகள் ஆறுகள் ஆகிய பகுதிகளில் நடுவதற்கு தன்னார்வலர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த பனை விதை நடும் நிகழ்ச்சி  துவக்கப்பட்டுள்ளது தொடர்ந்து ஆறு லட்சம் பனை விதைகளும் விழுப்புரம் மாவட்டத்தில் நடப்படும் இதனை பாதுகாக்க வேண்டியது அப்பகுதி மக்களினுடைய பொறுப்பு என்று தெரிவித்தார்.
 
மேலும் அணைகளையும், கரைகளையும் பாதுகாப்பதற்கு பனைமரம் மிகவும் அவசியம் அனைத்து பொதுமக்களும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.