30 ஆண்டுகளாக ...என்னுடன் இருப்பது நீ மட்டும்தான் – கவின் உருக்கம் !

sinoj| Last Modified திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (22:12 IST)

பிரபல தனியார் சேனலின் பிக்பாஸ்-3
நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளவர் கவின். இவர் தற்போது லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


தற்போது 30 வது வயதாகும் கவின், தனது டுவிட்டர் பக்கத்தில், தன் வீட்டில் உள்ள மின் விசிறி குறித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், என் அம்மா அப்பாவுக்குப் பின்னர் என்னோடு இப்போது வரை உள்ளது நீ மட்டும்தான். நம் இருவருக்கும் வயது 30 என்று தெரிவித்து, ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். இது வைரல் ஆகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :