செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2016 (13:24 IST)

ஆதார் எண் சேர்க்காத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை

ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணையும் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட கெடு முடிந்ததை அடுத்து, ஆதார் எண்ணை இணைக்காத கார்டுகளுக்கு நேற்று முதல் பொருட்கள் வழங்கப்படவில்லை.


 

தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடிகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு (2017) முதல் புதிய ரே‌ஷன் கார்டு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 87 சதவீதம் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண் உள்ளிட்ட முழுமையாக விவரங்களை இணைக்க நவம்பர் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூறியிருந்தது.

அதன்படி நேற்று முதல் ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு உணவுப்பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை.