மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு.. அதிமுக செய்த தவறை செய்யாத தவெக..!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் பொறுப்பாகும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மதுரையில் அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற்ற போது டன் கணக்கில் உணவுகள் மிஞ்சியதாகவும், அவை குழி தோண்டி கொட்டப்பட்டதாகவும் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இது அதிமுக மாநாட்டிற்கே ஒரு பெரும் கரும்புள்ளியாக மாறிய நிலையில், இந்த தவறிலிருந்து தமிழக வெற்றிக் கழகம் பாடம் கற்று, மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு வித்தியாசமான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள உணவகங்களில் வரும் 27ஆம் தேதிக்குப் மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதாகவும், தொண்டர்கள் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதற்கு ஏற்ப திருப்தியளிக்கும் வகையில் உணவு ஓட்டல்களில் இருந்து வாங்கி அளிக்கப்படும் என்றும் இதனால் உணவு மீந்து போவதை தவிர்க்கலாம் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
Edited by Siva